இந்த நிலையில், கடந்த 8ம் தேதி கில்பர்ட் வீட்டை பூட்டிவிட்டு கேரளாவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் இன்று காலை ஊர் திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோவிலிருந்த 32 சவரன் தங்க நகைகள் திருடு போயிருந்தன.
இதுகுறித்து அவர் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும், சம்பவ இடத்தை டவுண் ஏஎஸ்பி மதன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.