தென்காசி: வெறிச்செயலில் ஈடுபட்ட கும்பல்; பதபதைக்கும் சிசிடிவி வெளியானது

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூரில் நேற்று இரவு முகமூடி அணிந்த கும்பல் ஒன்று திருமண வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை அரிவாளால் வெட்டி தப்பிச் சென்றது. இந்த சம்பவத்தில் 6 பேர் காயமடைந்தனர். மேலும், அதே கும்பல் நெல்லை மானூர் அருகே சாலையில் நின்ற முபாரக், அப்துல் ரகுமான் ஆகியோரையும் வெட்டியுள்ளது. இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் பைக்கில் செல்லும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி