திசையன்விளை: காணாமல் போன சிறுவன் மீட்பு

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை சுனைவாசம் தெருவை சேர்ந்த தாமஸ் மகன் செல்டன் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து காணாமல் போயினார். இதனை தொடர்ந்து அவரது உறவினர்கள் வீடுகள் உட்பட பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் கிடைக்காததால் யாராவது கடத்தி சென்றிருக்க கூடும் என்று கருதி திசையன்விளை போலீசில் புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து போலீசார் சிறுவனை தேடிய போது அவரது வீடு அருகே ஒரு இடத்தில் இருந்து மீட்டனர்.தாய் கண்டித்ததால் சிறுவன் பதுங்கி இருந்தது தெரிய வந்தது.

தொடர்புடைய செய்தி