திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் நேற்று (பிப்ரவரி 19) தமிழக சபாநாயகரும் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினருமான அப்பாவு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில் தேசிய கல்வி கொள்கை மும்மொழி கொள்கை தமிழக குழந்தைகளை குல தொழிலுக்கு அனுப்பும் என மத்திய பாஜக அரசை குற்றம் சாட்டினார். இந்த பேட்டியின்போது திமுகவினர் உடன் இருந்தனர்.