திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தனியார் கல்லூரி வேன் மடப்புரம் - செம்பாடு சாலையில் இன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் அருகே இருந்த பள்ளத்தில் சாய்ந்தது. இவ்வாறு கல்லூரி வேன் பள்ளத்தில் சாய்ந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.