நெல்லை மாநகர டவுன் தொட்டி பாலத்தெருவை சேர்ந்த பள்ளிவாசல் முத்தவல்லி ஜாகிர் உசேன் பிஜிலி இன்று (மார்ச் 18) அதிகாலை மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் கொலை வழக்கில் கார்த்திக், அக்பர்ஷா இருவரும் தற்போது நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.