ராதாபுரம் வட்டம் பணகுடி லெப்பை குடியிருப்பு தனியார் மஹாலில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் துறை சார்பில் சமுதாய வளைகாப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் 300 கர்ப்பிணி தாய்மார்களுக்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு, மாவட்ட வருவாய் அலுவலர் துரை முன்னிலையில் சீர் வரிசைகளை வழங்கி வாழ்த்தினார்.