திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் கோட்டைக்கருங்குளம் நம்பியாறு அணைக்கு தண்ணீர்வரத்து தடைபட்டதால் 36 குளங்களின் பாசன மேம்பாட்டுடன் கூடிய விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தொடர் பாதிப்பால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் நம்பியாறு அணை வழியாக ஆண்டுதோறும் விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டு விவசாயிகள் பயனடைந்து வந்தது குறிப்பிடத்தக்கது.