ராதாபுரம் ஊராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரியும் பாப்பா, இன்று பணியின் போது கண்டெடுத்த பணப்பை ஒன்றை ராதாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அந்த பணப்பையில் ரூபாய் 4200 இருந்ததாக கூறப்படுகிறது. நேர்மையாக செயல்பட்ட பாப்பாவின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.