ராதாபுரம்; உலக நன்மைக்காக நடந்த பூஜை

வள்ளியூரில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோயிலில் இன்று உலக நன்மைக்காகவும் விவசாயம் செழிக்கவும் வேண்டி சிறப்பு வேல் பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் வள்ளியூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டனர். பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு குங்குமம், சந்தனம், மஞ்சள் கயிறு போன்ற மங்கலப் பொருட்கள் வழங்கப்பட்டன. மக்கள் மனமுருகி முருகனை வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி