பழவூர் காவல் நிலைய சரகத்தில் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், வடமாநிலத்தைச் சேர்ந்த சமரேஷ் மண்டல் (31) என்பவரை சோதனையிட்டபோது, அரசால் தடை செய்யப்பட்ட 2 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததைக் கண்டறிந்து கைது செய்தனர். அவரிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.