ராதாபுரம்; பெண் விஏஓவிடம் நகை பறிப்பு

நெல்லை மாவட்டம் பணகுடியில், கிராம நிர்வாக அலுவலர் சுதா நேற்று (மே 7) மதியம் வீட்டில் முன்பு உள்ள கடையில் பொருட்கள் வாங்க சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சாலையில் சென்ற அவரை வழிமறித்து கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகையை பறித்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து பணகுடி காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துணிகர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி