ராதாபுரம்; அரசு பஸ் கவிழ்ந்து விபத்து

கூடன்குளம் அருகே முருகானந்தபுரம் பகுதியில் இன்று (நவம்பர் 15) நாகர்கோவில் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கூடங்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கூடங்குளம் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி