திருநெல்வேலி தெற்கு மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத்துக்கு உட்பட்ட ராதாபுரம் மத்திய மண்டலில் நேற்றிரவு பாரதிய ஜனதா கட்சியின் சக்திகேந்திர பொறுப்பாளர்கள் மற்றும் கிளை தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மண்டல நிர்வாகி கொம்பையா பங்கேற்று, கிளை நிர்வாகிகளுக்கு தேர்தல் பணி தொடர்பாக முக்கிய ஆலோசனைகளை வழங்கினார்.