நெல்லை: கைதி தப்பிய விவகாரம்; இரண்டு போலீஸ் சஸ்பெண்ட்

விஜயநாராயணம் காவல் நிலையப் பகுதியில் பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்திய வழக்கில் கைதான சாம்ராஜ் (27) என்ற இளைஞர், மருத்துவப் பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது தப்பி ஓடினார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மாவட்டக் காவல் பணியில் அலட்சியமாக இருந்ததாகக் கூறி இரண்டு காவலர்களை எஸ்.பி. சஸ்பெண்ட் செய்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி