திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருள்மிகு இராமலிங்க சுவாமி திருக்கோயிலில் ஓதுவார் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறங்காவலர் குழு தலைவர் அசோக்குமார், செயல் அலுவலர் மாரியப்பன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். விண்ணப்பதாரர்கள் மார்ச் 1 அன்று 18 வயதிற்கு கீழ் உள்ளவராகவும் 35 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருக்கக் கூடாது. விண்ணப்பங்களை வருகின்ற ஏப்ரல் 1 மாலை 5:45 மணிக்குள் கோயில் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.