நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கேடிசி நகர் திடலில் நேற்று (ஏப்ரல் 8) நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது, கடும் வெயில், கூட்ட நெரிசல் மற்றும் நீண்ட நேர காத்திருப்பு காரணமாக பலர் திடீரென மயங்கி விழுந்தனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களுக்கு தண்ணீர் கொடுத்து தூக்கிச் சென்றனர். இதனால் பிரச்சாரக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.