நெல்லை; மக்களுக்கு முட்டை வழங்கிய திமுகவினர்

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டைப் புறக்கணித்ததாகக் கூறி, திமுக கூட்டணி சார்பில் பாளை தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல் வஹாப் எம்எல்ஏ மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் இதில் கலந்துகொண்டனர். பட்ஜெட்டில் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை எனக்கூறி, திமுகவினர் முட்டை வழங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி