நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அணையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனையடுத்து நெல்லையில் உள்ள முக்கிய கால்வாய்களில் தண்ணீர் வந்தது. இந்த நிலையில் பாளையங்கோட்டை பகுதியில் ஓடும் பாளையங்கால்வாயில் திடீர் தண்ணீர் வரத்தால் குப்பை கூளங்களாக காட்சியளித்தது. தற்போது பாளையங்கால்வாயில் தண்ணீர்வரத்து சீரானது.