திருநெல்வேலி: ஏர்வாடியைச் சேர்ந்த வள்ளியம்மாள் (72) என்பவர், உறவினர் வீட்டிற்கு வருவதற்காக அரசுப் பேருந்தில் நெல்லை புதிய பேருந்து நிலையம் வந்தார். அப்போது, அவர் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்கச் சங்கிலி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார், தங்கச் சங்கிலி திருட்டுப் போனதா அல்லது பறித்துச் செல்லப்பட்டதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.