நாங்குநேரி; இன்ஸ்பெக்டரை எஸ்பி பாராட்டினார்

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி காவல் நிலையத்தில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வழக்கினை காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் மீண்டும் விசாரணைக்கு கொண்டு வந்து நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து சிறப்பாக பணியாற்றினார். இதனால், காவல் ஆய்வாளர் சுப்பிரமணியனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசண்ண குமார் இன்று தனது அலுவலகத்துக்கு நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். இந்த நடவடிக்கை காவல் துறையினரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி