கூட்ட நெரிசலில் மர்ம நபர்கள் கைவரிசை

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள ஆலடியூரை சேர்ந்தவர் ராமலட்சுமி (49). இவர் நேற்று வள்ளியூரில் இருந்து ஆலடியூருக்கு பஸ்சில் சென்ற போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவர் அணிந்திருந்த ரூ 3 லட்சம் மதிப்புள்ள 6 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி உள்ளனர். இதுகுறித்து வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி