நெல்லை மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர் காஜா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நெல்லை மாநகர மேலப்பாளையத்தில் பிரதான சாலையாக நேதாஜி சாலை அமைந்துள்ளது. சந்தை ரவுண்டானாவிலிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள இந்த சாலையானது குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவ்வழியாக வரும் பொழுது மிகுந்த தடுமாற்றம் அடைகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைத்து தரும்படி மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.