திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் பொதுமக்கள் அதிகமாக வசிக்கும் மேற்கு பகுதியான பாலமுருகன் திருக்கோவில் அருகே உள்ள ஓடையில் கழிவுநீர் மற்றும் குப்பைகள் தேங்கிக் காணப்படுவதால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மழை பெய்யும்பொழுது ஓடையில் நீர் சரியாக செல்லாமல் கழிவுகள் சேர்ந்து கொசு உற்பத்தி அதிகரித்து விடுகிறது. இதனால் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.