வள்ளியூர் அருகே பெருங்குடி பகுதியை சேர்ந்த சுந்தர் (23) போக்சோ வழக்கின் கைதி ஆவார். இவர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டம் கீழ் நடவடிக்கை எடுக்க வள்ளியூர் போலீஸ் எஸ்பிக்கு வேண்டுகோள் விடுத்தனர். எனவே மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில் இன்று (21. 05. 2026) சுந்தர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.