பேட்டையைச் சேர்ந்த மணி என்பவரின் மனைவி, சரித்திர பதிவேடு குற்றவாளியான சரண்யா (28), சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல்துறை பரிந்துரைத்தது. இதன் அடிப்படையில், கலெக்டர் சுகுமார் உத்தரவின் பேரில், சரண்யா பாளை சிறையில் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.