புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மாவட்ட நீதிமன்றம் முன்பு இன்று காலை வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராஜேஸ்வரன் தலைமை வகித்தார். இதில் நிர்வாகிகளான மணிகண்டன், காமராஜ், வினோத், பிரம்மா, வெயிலுமுத்து, சுதர்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் திரளான வழக்கறிஞர்கள் மனித சங்கிலியாக கைகோர்த்து கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.