வி.கே. புரம் காவல் நிலைய சரகத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அய்யனார்குளம் விலக்கு அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற கோபாலகிருஷ்ணன் (72) என்பவரை சோதனை செய்தனர். அவரிடமிருந்து அரசால் தடை செய்யப்பட்ட 4 கிலோ 500 கிராம் புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.