நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் நேற்று (மே 17) திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. அளித்த பேட்டியில், மும்மொழி கொள்கையை திமுக தனது ஆட்சிக் காலத்திலும் சரி, தற்போதும் சரி எதிர்த்து வருவதாகத் தெரிவித்தார். புதிதாகப் பதவியேற்றுள்ள அரசும் தமிழக மக்களின் விருப்பத்திற்கு இணங்க மும்மொழி கொள்கையை எதிர்க்க வேண்டும் என்றும், எந்த விதமான மொழித் திணிப்பையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.