கொடூர கொலை; பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரசு உதவி

நாங்குநேரி அருகே நேற்று இரவு ஒரு கும்பல் மாற்றுத்திறனாளி ஜான் மற்றும் வடமாநில தொழிலாளி ஒருவரை வெட்டி கொலை செய்தது. மேலும் 7 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். கொலையான ஜானின் மனைவிக்கு ஆறுதல் கூறிய அவர், நிதி உதவி மற்றும் வீடு கட்டுவதற்கான அரசாணையை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி