பணகுடி பிரதான சாலையில் புனித மாதா ஆலயம் அருகே நேற்று (பிப்ரவரி 4) இரவு இருசக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில், கோரி காலனியைச் சேர்ந்த பிரவீன் மற்றும் தளவாய்புரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் ஆகிய இரு இளைஞர்கள் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பான அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.