அதிமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினருமான இசக்கி சுப்பையா இன்று (மே 26) காலை சபாநாயகரை சந்தித்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை வழங்கினார். அந்தக் கடிதம் கணிணியில் தட்டச்சு செய்யப்பட்டிருந்ததால், அதை ஏற்க மறுத்த சபாநாயகர், இசக்கி சுப்பையாவை கைப்பட கடிதம் எழுதி வருமாறு திருப்பி அனுப்பினார். தற்போது அவர் தனது கைப்பட கடிதத்தை எழுதி வருகிறார். ராஜினாமா செய்தையடுத்து இசக்கி சுப்பையா தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.