விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட இளைஞர்-வைரல் வீடியோ

திருநெல்வேலி மாவட்டம் பணகுடியை சேர்ந்த மாணிக்கம் என்ற இளைஞர் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் ஆயுதம் வைத்து வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு தற்போது வெளியே வந்துள்ள நிலையில் விழிப்புணர்வு வீடியோ ஒன்று இன்று வெளியிட்டுள்ளார்.

அதில் தன்னைப்போல் யாரும் ஆயுதம் வைத்து வீடியோ வெளியிட வேண்டாம், வாகனத்தை சிறந்த முறையில் கையாளுங்கள் இல்லையெனில் போலீசாரின் நடவடிக்கை கடுமையாக இருக்கும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

தொடர்புடைய செய்தி