ஓய்வூதியம் கேட்டு நடையாய் நடக்கும் பாட்டி; நெல்லையில் சோகம்

நெல்லை மாவட்டம் பரப்பாடி அருகே சுப்பிரமணியபுரம் என்ற கிராமத்தில் வசிக்கும் 95 வயது மூதாட்டி பேச்சியம்மாளுக்கு அரசின் முதியோர் ஓய்வூதியம் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஓய்வூதியம் கேட்டு அதிகாரிகளிடம் மனு அளித்து வருகிறார். நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் முகாமில் தனக்கு ஓய்வூதியம் கேட்டு மூதாட்டி மனு அளித்தார். மூதாட்டியின் நிலை அனைவரையும் கவலையடய செய்தது.

தொடர்புடைய செய்தி