நெல்லை: பெண்ணுக்கு போனில் தொந்தரவு.. வாலிபர் கைது

நெல்லை கருப்பன்துறை பகுதியில் வசிக்கும் பிரான்சிஸ் ஜவர்கலால் என்பவரின் மகளுக்கு வைணவப் பெருமாள் என்பவர் அலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். இதை தட்டிக் கேட்ட பிரான்சிஸ் ஜவர்கலால் மற்றும் அவரது மனைவியை பெருமாள் கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் வைணவப் பெருமாளை திங்கள்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி