நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக கோடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகளில் தண்ணீர் அதிகரித்துள்ள நிலையில் மூலைக்கிராமப்பட்டி பகுதியில் இன்று வார விடுமுறை நாளை முன்னிட்டு இளைஞர்கள் வயல்வெளியில் உள்ள கிணற்றில் டைவிங் அடித்து உற்சாகமாக குளியல் போட்டனர். கிணற்றில் முழுவதும் நீர் இருந்த நிலையில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.