நெல்லை டவுன் சாலியர் தெருவில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று பூமிதித் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி பிரம்மாண்ட தீமிதிப்புத் தளம் உருவாக்கப்பட்டது. பக்தர்கள் மனமுருகப் பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றினார்கள்.