நெல்லை: தவெக நிர்வாகி திடீர் மரணம்

தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளர் சஜி மாரடைப்பால் இன்று (மார்ச் 15) மரணம் அடைந்தார். இவர் கட்சி பணிகளுக்காக சென்னை சென்றிருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மறைந்த சஜி நெல்லை மாவட்டத்தில் நடிகர் விஜயின் மன்றம் வளர்ச்சி பெற பெரிதும் உதவியாக இருந்தார். விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு கட்சியின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்தார்.

தொடர்புடைய செய்தி