நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் செல்லும் நிலையில் தனியார் கட்டிடத்தின் பின்புறம் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கரும்புகையுடன் கூடிய தீ மளமளவென எரிந்ததால் அப்பகுதியில் இருந்த மக்கள் பீதி அடைந்தனர். தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்றனர். முதல் கட்ட விசாரணையில் அங்கு கடந்த பழைய பொருட்கள் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.