நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை வ. உ. சி. மைதானத்தில் (ஜனவரி 26) குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதை ஒட்டி கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவர்கள் ஆர்வமுடன் வந்திருந்தனர். குறிப்பாக பள்ளி மாணவிகள் ஒரு குழுவினர் தேசிய கொடியின் மூவர்ண நிறத்தில் உடை அணிந்து பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்தனர். மூவர்ணத்தில் ஜொலித்த மாணவிகளை அனைவரும் பாராட்டினர்.