பாளையங்கோட்டை தனியார் கான்வென்ட் முன்புறம் பாதாள சாக்கடை மற்றும் கழிவு நீர் கால்வாய் ஓடையில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பொங்கி நடுரோட்டில் சாலையில் நிரம்பி குளம் போல் தேங்கி உள்ளது. இன்று காலை அந்த வழியாக பள்ளிக்கு சென்ற மாணவர்கள் பெரிதும் சிரமப்பட்டனர். அதேபோல் வாகன ஓட்டிகளும் அவதி அடைந்தனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.