பாளை: பிரபல மருத்துவமனையில் மாணவர் தற்கொலை

பாளையைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ரமேஷின் மகன் மோசஸ் (20), நெல்லை சந்திப்பில் உள்ள பிரபல கண் மருத்துவமனையில் நர்சிங் படித்து வந்தார். மருத்துவமனை விடுதியில் தங்கிப் படித்த இவர், நேற்று இரவு தனது அறையில் போர்வையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சக மாணவர்கள் அளித்த தகவலின் பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி