ஈரான் மீது தாக்குதல் நடத்தியும், அந்நாட்டு உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கொமெனியை படுகொலை செய்த அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை கண்டித்து, நேற்று இரவு மேலப்பாளையத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் மெழுகு திரி ஏந்தி அமைதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ரசூல் மைதீன் உள்ளிட்டோர் பங்கேற்று மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர்.