பாளையைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி சூடாமணி, இளம் எழுத்தாளர், கவிஞர் மற்றும் சொற்பொழிவாளராக சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அவரது திறமைகளைப் பாராட்டி, தமிழக அரசு 2025 ஆம் ஆண்டுக்கான 'தமிழ்நாட்டின் சிறந்த பெண் குழந்தை' என்ற விருதை அவருக்கு வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, எஸ்பி பிரசன்ன குமார் நேற்று மாலை சூடாமணியை நேரில் அழைத்து வாழ்த்திப் பாராட்டினார்.