நெல்லை மாநகரில் நடைபெற்ற கொலை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி முகமது தெளபிக் (எ) கிருஷ்ணமூர்த்தியை பிடிக்க நடந்த தேடுதல் வேட்டையில் நெல்லை மாநகர காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தி குற்றவாளியை பிடித்தனர். ரெட்டியாப்பட்டி பகுதியில் பதுங்கி இருந்த குற்றவாளியை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றபொழுது துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்துள்ளதாக மாநகர காவல் துறை அறிவித்துள்ளது.