தமிழகத்தில் மும்மொழி கொள்கை விவகாரம் அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நெல்லை திமுக பொறியாளர் அணி சார்பில் குலவணிகர்புரத்தில் உள்ள மத்திய அரசின் பாஸ்போர்ட் அலுவலகத்தில் உள்ள இந்தி எழுத்துக்களை அழிக்க உள்ளதாக இன்று தகவல் பரவியது. இதையடுத்து மாநகர போலீசார் பாஸ்போர்ட் அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர். ஆய்வாளர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.