நெல்லை: போக்சோ வழக்கு.. முதியவருக்கு 16 ஆண்டு சிறை

பணகுடி தளவாய்புரத்தை சேர்ந்த இசக்கியப்பன் (56) என்பவர் 2023ல் 12 வயது சிறுமியிடம் பாலியல் தாக்குதல் நடத்தி மிரட்டல் விடுத்த வழக்கில், போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், இசக்கியப்பனுக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 5,000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெரியம்மா அளித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் இசக்கியப்பனை கைது செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி