நெல்லையில் இன்று கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டன. ஒரு மாதம் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பள்ளிக்குத் திரும்பிய மாணவர்களை உற்சாகமோடு வரவேற்கும் விதமாக பல்வேறு பள்ளிகளில் மாணவர்களுக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. அந்த வகையில் பாளையம் இக்னேசியஸ் கான்வென்ட் பள்ளியில் போக்குவரத்துப் போலீசார் இன்று மாணவர்களுக்கு சாக்லேட் வழங்கி வழி அனுப்பி வைத்தனர்.