நெல்லை மாநகர காவல்துறை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர் முகாமில், 6 நபர்கள் தங்கள் புகார் மனுக்களை காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணியிடம் சமர்ப்பித்தனர். அவர்களின் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும் என காவல் ஆணையர் உறுதியளித்தார். இம்முகாமில் காவல் துணை ஆணையர்கள் பிரசண்ணகுமார் மற்றும் வினோத் சாந்தாராம் ஆகியோர் பங்கேற்றனர்.