இளங்கலை நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இளங்கலை நீட் தேர்வில் திருநெல்வேலியை சேர்ந்த மாணவன் சூரிய நாராயணன் தமிழகத்தில் முதல் இடமும் அகில இந்திய அளவில் 27வது இடமும் பிடித்துள்ளார். திருநெல்வேலி புஷ்பலதா சிபிஎஸ்சி பள்ளியின் மாணவன் சூரிய நாராயணன் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளதால், அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.